நுவரெலியா – வி. தீபன்ராஜ்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மாக்கஸ்தொட்ட கீழ்பிரிவு தோட்டத்திற்கான கொங்கிரீட் வீதி, 43 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு, இன்று (21) காலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. நீண்ட காலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் பழுதடைந்திருந்த 465 மீட்டர் நீளமான குறித்த வீதி, அனர்த்த முகாமைத்துவ செயல்திட்டத்தின் (டித்வா அனர்த்த செயல்திட்டம்) கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக முழுமையாகக் கொங்கிரீட் இடப்பட்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான சரத் குமாரசிங்க, ரங்கன் பண்டார, அசோக ஆகியோருடன் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மேலும், பீட்ரு (Pedro) தோட்ட முகாமையாளர் நிரோசன் பீரிஸ், வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் பெருமளவான தோட்டப் பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
