இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!
கஜரூபன் திவ்யா நுவரெலியா
நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஸ்க்ரப் தோட்டத்தில், நீண்டகாலமாக மக்கள் முன்வைத்து வந்த கோரிக்கைக்கு அமைவாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
535 எல் கிராம சேவகர் பிரிவில், பிரஜாசக்தி திட்டத்தின் ஊடாக குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாநகர சபை உறுப்பினரும் பிரஜாசக்தி தலைவருமான நலின் ராஜ் அவர்களின் தலைமையில், சுப நேரத்தில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
குறித்த பாலம் அப்பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பாதையாகக் காணப்படுவதுடன், இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இன்னும் சில வாரங்களில் பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் தோட்டப் பிரதி முகாமையாளர், தோட்ட மேற்பார்வையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தோட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாகத் தாம் எதிர்பார்த்துவந்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
