Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

November 21, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

November 21, 2026

நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

November 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!
Breaking

ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

ThanaBy ThanaNovember 21, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

 

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆடை உற்பத்தித் துறையின் 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த வணிகத் தலைவருக்கான விருதைப் பெற்ற திரு. ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி அவர்கள், இன்று (21) மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR654 விமானத்தின் மூலம் தாயகம் திரும்பிய அவரை வரவேற்பதற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் எவர்கிரீன் விளையாட்டுக் கழக நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்து உற்சாகமான வரவேற்பளித்தனர்.

 

மலையகத்தின் பூண்டுலோயா ஹெரோ பெருந்தோட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்து, தனது தொழில்முறைப் பயணத்தின் ஊடாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தியின் இந்த வருகை, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மலையக மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி அவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் டோகோ (Togo) நாட்டில் இயங்கி வரும் Star Garments Togo SARLU நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநராக (Executive Director) பணியாற்றி வருகின்றார்.

 

ஆடை உற்பத்தித் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைமைத்துவப் பங்களிப்பையும் தொழில்முறைச் சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான “OUTSTANDING BUSINESS LEADER OF THE YEAR (TEXTILE AND GARMENT MANUFACTURING) – 2026” என்ற சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கானா நாட்டின் தலைநகரான அக்ரா நகரில் அமைந்துள்ள Kempinski Hotel Gold Coast City இல் நடைபெற்ற Africa Business Forum & Awards 2026 நிகழ்வில் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

 

“Shaping Africa’s Business Future: From a Single African Market to Global Competitiveness” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்திருந்தது.

 

 

 

டோகோ நாட்டில் இயங்கி வரும் Star Garments Togo SARLU நிறுவனம், ஆடை உற்பத்தித் துறையில் தனது முதலீடுகள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகள் மூலம் அந்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் பங்களித்து வருகின்றது.

 

குறிப்பாக, இந்நிறுவனத்தின் தொழிற்சாலை நடவடிக்கைகள் மூலம் சுமார் 2,200 இளம் டோகோ நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

மலையக பெருந்தோட்டப் பகுதியில பிறந்து வளர்ந்த அவர் தனது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தொழில்முறைத் திறமையின் மூலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வதேச விருதைப் பெற்றுள்ளமை இளைஞர்களுக்கும் மலையக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.

 

 

சர்வதேச விருதைப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ள ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு குடும்பத்தினர், எவர்கிரீன் விளையாட்டுக் கழக நலன்புரிச் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரவேற்பளித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026

    43 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மாக்கஸ்தொட்ட கீழ்பிரிவு தோட்ட வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

    November 21, 2026

    தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி: 22 கரட் பவுண் ரூ. 314,400 ஆகக் குறைவு!

    November 21, 2026
    Editors Picks

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026

    43 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மாக்கஸ்தொட்ட கீழ்பிரிவு தோட்ட வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

    November 21, 2026

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.