Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

October 25, 2026

லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

October 24, 2026

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

October 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் உத்வேகத்துடன் பங்கேற்ற இந்திய யாத்திரிகர்கள்
இலங்கை

புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் உத்வேகத்துடன் பங்கேற்ற இந்திய யாத்திரிகர்கள்

ThanaBy ThanaMarch 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023 மார்ச் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் மீனவர்கள் மற்றும் மதகுருமார்கள் உட்பட கிட்டத்தட்ட 2500 இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வருடாந்தம் நடைபெறும் இத்திருவிழாவில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான இலங்கை யாத்திரிகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக 2023 மார்ச் மூன்றாம் திகதி கச்சதீவினை வந்தடைந்த யாத்திரிகர்களை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார். அன்றைய தினம் இத்திருவிழாவினை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகளும் மாலை நேர திருப்பலியும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2023 மார்ச் 04ஆம் திகதி இந்திய மற்றும் இலங்கை பாதிரியார்களால் மீனவர்களின் இரட்சகரான பதுவா புனித அந்தோனியாருக்காக விசேட திருப்பலி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பாரம்பரிய திருவிழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இப்பெருவிழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்திய இலங்கை யாத்திகர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான அல்லது காட்சிப்படுத்துவதற்கான கூடங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

இவ்வருடத்தின் திருவிழாவுக்கு இந்திய அரசாங்கம் நிதி ஆதரவினை வழங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கொன்சுலேட் அலுவலக அதிகாரிகள் இவ்விழாவிற்காக விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் இந்திய யாத்திரிகர்கள் மிகுந்த உத்வேகத்துடன் கலந்துகொள்கின்றனர். கடந்த இரு வருடங்களாக கொவிட் 19 காரணமாக இத்திருவிழா ஏற்பாடுகளிலும் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. இத்திருவிழாவின் மூலமாக இந்திய இலங்கை மக்களிடையிலான வலுவான தொடர்புகள் சுட்டிக் காட்டப்படுவதுடன் கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான இந்த அயல்நாடுகளைச்சேர்ந்த மீனவ சமூகங்களிடையிலான நெருக்கமான உறவினைக் கட்டி எழுப்புவதற்கும் இவ்வாறான திருவிழா வழிசமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

04 மார்ச் 2023

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026
    Editors Picks

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    ஜனநாயக தேசிய கூட்டணி: பண்டாரவளை பிரதேச அமைப்பாளராக களாதரன் ஆகாஷ் நியமனம்!

    October 25, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.