நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நோர்வுட் திசையிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் பயணித்த சிறுமியொருவரே, இவ்வாறு வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுமி, உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நோர்வுட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
