Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

November 26, 2026

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026

தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!
Breaking

ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

ThanaBy ThanaNovember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட லிந்துலை – ராணிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்கள், தமது பிரதான வீதியை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரி இன்று (26) மாலை 3.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

​

நோனாதோட்டம் நகரத்திலிருந்து ராணிவத்தை தோட்டம் வரை செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையின் காரணமாக முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

​வீதி பழுதடைந்துள்ளதால், தோட்டத்திற்குள் வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படுகின்றன.

​இதன் காரணமாகப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், நோயாளர்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட தூரம் கால்நடையாகச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

​

பெரிய ராணிவத்தை, சின்ன ராணிவத்தை, குட்டிமலை மற்றும் பம்பரகலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி மேலும் மோசமடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு வீதியை அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

 

பம்பரகலை தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, இல்டனோல் (Eildon Hall) தமிழ் வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மக்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026
    Editors Picks

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.