தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தேசிய பாடசாலையின் மாணவி செ.மதிஷாலனி பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 09 A சித்திகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இவர் தெரணியகலை மியனவிட தோட்டம் 90 ஏக்கர் பிரிவை சேர்ந்த செந்தில்குமார், சாந்தி ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவி உட்பட பாடசாலைக்கு நல்ல பெறுபேறுகளை பெற்ற அத்தனை மாணவர்களையும் ,அவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் உட்பட அதிபருக்கு எமது வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் .