நுவரெலியா – லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடையவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.