Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

September 20, 2026

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதித்தமைக்கு மக்கள் எதிர்ப்பு
இலங்கை

புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதித்தமைக்கு மக்கள் எதிர்ப்பு

ThanaBy ThanaMarch 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல் அகழ்விற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8 ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும், எனினும் அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகாரசபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் பேச ரிசாட் பதியுதீன் முயற்சி!

    September 19, 2026

    அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!–செந்தில் தொண்டமான்

    September 19, 2026
    Editors Picks

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.