வெளிவந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மமா/ஹட்/ பின்னோயா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
100 புள்ளிகளுக்கு மேல் 29 மாணவர்கள் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேற்படி சித்திப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 21/03/2023 செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் கௌரவ திரு.பி . ஸ்ரீதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
