கருணை இல்லம் சமூகநல அமைப்பினரின் மற்றொரு மைல் கல்லான செயற்த்திட்டம் கண்டி பன்வில அலகொல்ல என்ற பிரதேசத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அப்பிரதேசத்தில் மல்லிகை முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சீருடை , பாடசாலை பைகள், உணவுப்பெட்டி, தண்ணீர் போத்தல் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வானது கருணை இல்லம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமாகிய திரு.செல்வக்குமார் மற்றும் அமைப்பின் உறுப்பினர் விமலேஸ்வரியின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர்,ஆலோசகர், நுவரெலியா மாவட்ட இணைப்பாளர், தலைவரின் மனைவி மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர், யுவதிகள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


