பசறை வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நல்லிணக்க சிறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (04) பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் தலைமையில் பசறை நகர் புதிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சகல இன மதத்தலைவர்கள், பசறை பிரதேச செயலக செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏனைய அரச நிறுவன உயர்அதிகாரிகள், கல்வி பணிப்பாளர்கள்,
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது இப்தார் நிகழ்வும் இஸ்லாமிய கலாசார நிகழ்ச்சிகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. பசறை பிரதேசத்தில் வாழ்கின்ற பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் சமத்துவத்துவத்தையையும் மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான இப்தார்தின சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதையிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நடராஜா மலர்வேந்தன்

