நு/ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (05.04.23 ) இடம்பெற்றது.
பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி புஷ்பலீலா மற்றும் தற்போதய அதிபர் சத்தியசீலன் தலைமையில் இன்று காலை 9.10 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக நுவரெலியா கல்வி திணைக்கள பணிப்பாளர் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பாடசாலையின் கட்டிடம் அமைக்க முழுமையான அனுசரணை வழங்கிய நன்கொடையாளர்கள் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,மாணவர்கள் பழையமாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
I

