பதுளை Friendlyship அமைப்பினது மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று (06) அமைப்பின் அங்கத்தவர்களால்
சர்வமத இறை பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டதோடு பதுளை கல்வி வலயத்தித்தில் தெரிவுசெய்யப்பட்ட எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் மற்றும் எலதலுவ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்
வழங்கிவைக்கப்பட்டன.

அத்தோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலர்உணவு பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வின் அனுசரணையாளராக பதுளை நகர தொழிலதிபர்
துர்கா நிறுவனத்தின் உரிமையாளர் அரசன் பெரியசாமி சந்திரசேகர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் பொருட்களை வழங்கிவைத்தனர்.
நடராஜா மலர்வேந்தன்

