CYC விளையாட்டு கழகத்தின் சித்திரை கொண்டாட்டம்.
கேம்பிரி மேற் பிரிவு இளைஞர் கழகத்தின் (CYC) பிறந்த தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடாத்தப்படும் கலை, கலாச்சார, விளையாட்டு போட்டிகளின் முதற்கட்டமாக மகளீருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 11ம் திகதி இடம்பெற்றிருந்த அதே வேளையில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் கேம்பிரி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மொத்தமாக 10 அணிகள் மோதிய இந்த விளையாட்டு போட்டியில் இறுதி சுற்றில் CYMBRU SUPER KINGS அணியும் CYC CHELLENGEGERS அணியும் மோதியதில் CYC CHELLENGEGERS அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி தமது வெற்றியை பதிவு செய்து கொண்டது.
மேலும் நாளைய தினத்தில் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் முகமாக மரதன் ஓட்ட போட்டி, சறுக்கு மரம் ஏறுதல், தேங்காய் துருவல் என பல்வேறு சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது குறித்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு நிகழ்வும் இளைஞர் யுவதிகளை உற்சாகப்படுத்தும் DJ இசை நிகழ்ச்சியும் மாலை வேளையில் ஆலய முற்றத்தில் இடம்பெற உள்ளது சிறப்பம்சமாகும்.

