எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரை ஆற்றில் மிதந்து வரும் மீன்களை உன்ன வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக எல்ஜின் காட்டுப்பகுதியில் இருந்து வரும் ஆற்றுநீர் கருமை நிறமாக மாரி வருவதுடன் குறித்த ஆற்றில் காணப்படும் மீன்கள் தொடக்கம் நீர்வாழ் உயிரிணங்கள் இறந்து வருவதை பிரதேச மக்கள் அவதானித்து வருகின்றனர்.

அதே போல் இன்றும் காலை முதல் அதிக எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து வருவதை கன்ட மக்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்வ இடத்துக்கு சென்ற சுகாதர வைத்திய அதிகாரி குறித்த மீன்களை பரிசோதித்து மக்களை குறித்த மீன்களை உணவுக்கு எடுக்க வேண்டாம் என அறிவித்தல் விடுத்துள்ளதோடு எல்ஜின் பக்கமாக மேலதிக பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
இது குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு இப்படி கருமையான நிறத்தில் ஆற்றில் தண்ணீர் வருவதால் குளிப்பது தொடக்கம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

