மீரிகம பமுனுவத்த பிரதேசத்தில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது, அவர்களிடம் 8 தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய நபர்களுக்கு சொந்தமான 2 காசோலைப் புத்தகங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் தியபெதும பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய தியபெதும மற்றும் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று (25) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
