Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

July 31, 2026

பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நகர நெரிசலைக் குறைப்பதற்காக கொழும்பு நகருக்கு பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் …
இலங்கை

நகர நெரிசலைக் குறைப்பதற்காக கொழும்பு நகருக்கு பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் …

ThanaBy ThanaApril 26, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.

இவற்றில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் மற்றைய இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் நிர்மாணிக்கப்படும்.

கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 02, யூனியன் பிளேஸ் பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில்  நேற்று (25) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வாகனத தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படுகிறது.

இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடம் சுமார் 300 வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. க வாகனத தரிப்பிடத்தின் செயல்பாடு கணினிகள் மூலம் செய்யப்படுகிறது. இதில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்த வருமானத்தில் பெறப்படும் வருமானத்தில் 20% நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, கொழும்பு மாவட்டத்தில் பொது வாகனத் தரிப்பிடமின்மையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையினரின் தலையீட்டுடன் இவ்வாறான நகர உள்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பைச் சுற்றி போதிய வாகனத் தரிப்பிட வசதிகள் இல்லாததாலும், முறையாக இயங்காததாலும் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களின் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவது பாரிய பிரச்சினை எனவும், இவ்வாறான நவீன தொழிநுட்ப வாகன தரிப்பிடங்களை அமைப்பது கொழும்பு நகரின் அபிவிருத்திக்கு உதவும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், இது தொடர்பான சகல செயற்பாடுகளையும் தயார்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் சுமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026
    Editors Picks

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.