கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு சிவன் திருக்கோயில்

ஆதிசிவன் கோயில் கொண்ட அருள் பொங்கும் கோயில்
அனைத்துயிர்கள் உள்ளாடும் வள்ளல் உறை கோயில்
கேட்கின்ற வரங்க ளெல்லாம் தந்தருளும் கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்

தென்கிழக்கு திசையிலுள்ள திருக்கோயில்
கருணை வெள்ளம் பொங்குகின்ற அன்பர் உறை கோயில்
கவலைகளை வேரறுக்கும் அண்ணல் உறை கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்
கடலலையின் ஓசையினை உள்வாங்கும் கோயில்
காலத்தை வென்ற எங்கள் இறையுறையும் கோயில்
கோல் கோணா அருளளிக்கும் ஐயன் உறை கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்
அண்டங்களை ஆடச் செய்யும் அப்பன் உறை கோயில்
ஆறுதலைத் தருகின்ற நாதன் உறை கோயில்
அந்தரத்தில் நின்றாடும் அண்ணல் உறை கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்
தமிழ் தந்த பெருமானார் உறையும் திருக்கோயில்
தாராள மனம் தந்து வாழவைக்கும் கோயில்
திரண்டு வரும் துன்பங்களைத் துடைத்தெறியும் கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்
சுடலையிலே ஆடுகின்ற சிவனார் உறை கோயில்
சுற்றத்தை வாழவைக்கும் ஐயன் உறை கோயில்
உலகனைத்தும் ஆளுகின்ற உத்தமனார் கோயில்
பாண்டிருப்பில் எங்கள் சிவன் உறையும் கோயில்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
