மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக செட்டியார் தெருவில் மிகவும் சிறப்பாக 01.05.2023 அன்று இடம்பெற்றுது.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிருவாக குழு உட்பட அங்கத்தவர்கள் சிறப்பான ஒழுங்கமைப்போடு வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி முடித்திருந்தார்கள்.
இந்த விளையாட்டு போட்டிக்கு இலங்கையின் சர்வதேச விளையாட்டு வீராங்கனியான ஸ்ரீயாணி குலவன்ச கலந்து சிறப்பித்தார்.
காலை 8 மணிக்கு ஆரம்பமான மரதன் ஓட்டப்போட்டியில் பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தை சேர்ந்த எம் .கோபிநாத் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்.
மேலும் மரதன் ஓட்டப்போட்டியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு அம்சங்கள் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றன. குறிப்பாக சிறுவர்கள் ஆர்வமாக கலந்துகொண்ட யானைக்கு கண்வைத்தல் ,கராம் போட்டி ,பலூன் உடைத்தல் என்பன சுவாரசியமான போட்டிகளாக அமைந்தன.
இறுதியாக போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கும் அனுசரணை வழங்கியவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
லோகேஷ்