ஜப்பானின் மத்திய மாகாணமான இஷிகாவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒருவர் உயிரிழந்ததுடன், சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.42 மணிக்கு ஏற்பட்டதாக கியோடோ செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்தில் சில மாற்றம் ஏற்படும் என்று அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
