களுத்துறையில் அண்மையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சற்று முன்னர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய சந்தேக நபர், களுத்துறையில் உள்ள ஹோட்டல் அறைக்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முன்னதாக மூவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
