தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (11) முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
