அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர கிண்ணத்துக்கான குத்துச்சண்டை கந்தலாய் நகர சபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வருகிறது.
இதில் நாடெங்கிலும் உள்ள சுமார் 100 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி வருகின்றனர்.
இப்போட்டியில் நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி 7 மாணவர்கள் வெவ்வேறு வயதுபிரிவிலும் எடைப்பிரிவிலும் பங்குபற்றும் நிலையில் அவர்களில் 4 குத்துச்சண்டை வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் அவர்கள் பெற்ற பெறுபேறுகள் பின்வருமாறு..
எஸ். திலக்சன் (தரம்-11, ஜூனியர் வயது பிரிவு,50-52 எடைப்பிரிவு )-இறுதிபோட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
02.சி.யுவேந்திரன்,(ஜூனியர் வயது பிரிவு,54-57 எடைப்பிரிவு) என்ற போட்டியாளர் டொம்பகொட, சீலரத்ன மகா வித்தியாலயத்தின் டி.என்.யசுர என்ற மாணவனுடன் அரையிறுதி போட்டியில் போட்டியிட்டு 3ம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தையும்
.பி.அபினாஸ் (தரம் 12-சீனியர் வயது பிரிவு,46-48 எடை பிரிவு) கம்பஹா, பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மாணவன் வகான் வீரசூரிய என்ற மாணவனுடன் போட்டியிட்டு 3ம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தையும்
பி.கிஷான்.(தரம் 12-யூத் வயது பிரிவு,60-63.5 எடை பிரிவு.) அக்குரணை,அசார் மத்திய கல்லூரி மாணவன் எ.எம்எம்.ஹக்கீம் என்ற மாணவனுடன் போட்டியிட்டு 3ம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தையும் சுவிகரித்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் பங்குகொள்ளும்
எஸ் திலக்சன் என்ற மாணவன் கடுகண்ணாவ ,தேசிய பாடசாலையின் மாணவன் எ.டபில்யூ.எ. ஜயதிஸ்ஸ என்ற மாணவனுடன் போட்டியிடுகின்றார்.