Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 
Breaking

அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

ThanaBy ThanaOctober 7, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்  – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அனுர திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச் செல்ல மறுப்பதோடு மறைமுகமான ஓர் ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுக்கின்றது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் திலகர் படுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் அத்தகைய பாரபட்சங்கள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது.

1.பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை ( Nevida) நீக்கம் செய்யும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த அதே வேளை மலை கலைப் பாதுகாக்கப்போகிறோம் எனும் பெயரில் புதுவிதமான மலையக அதிகார சபை கொண்டு வந்து புதிய கிராமங்களை அமைவதை தடுக்கும் சூழ்ச்சியை அரசாங்கம் செய்கிறது.

2. இளைஞர் சேவை மன்றங்கள் கிராம சேவகர் பிரிவுக்கு மட்டுப்பட்துதப்பட்டு மலையக பெருந்தோட்ட இளைஞர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நீக்கியுள்ளது.

3. இரவோடிரவாக நோர்வூட் பிரதேச செயலகத்தை சூறையாடி ஹட்டன் நகரில் அமைத்துக் கொண்டதுடன் இரத்தினபுரியில் (எலபாத்த) புதிய பிரதேச செயலக கடட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கின்ற போதும் நோர்வூட் டில் பிரதேச செயலகக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

4. தோட்ட துரைமாரைக் கொண்டு தொழிலாளர்களை மிரட்டுதல் ; குறிப்பாக தனி வீடு சார்ந்த விடயங்களில் இடம்பெறுகிறது ( சென்லேனார்ட்ஸ், நீல காமம், லவர்ஸ்லீப் தோட்டங்கள் என இந்த அவலம் தொடர்கிறது)

5. வீட்டு காணி உறுதி வழங்கலில் கடந்த ஆட்சியின்போது கடந்த கருணாதிலக்க காணி அமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப் படுத்தாமல் இரண்டாண்டுகளாக வெயாம் 50 வீடுகளை மாதாதிரமே அமைந்துள்ளது டன் காணி அமைச்சர் லால்காந்த மலையக மக்களின் காணி விடயம் குறித்து எதுவும் பேசுவதில்லை. ராகலைக்கு வந்து சென்றவர் வழங்கிய தீர்வு ஏதுமில்லை.

6. தோட்டத் தொழிலாளர்களுக்கு 400/- நாட்கூலி உயர்வை வழங்கி அதிக கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிபந்தனையை கம்பனிக்கு வழங்கி தோழிலாளர்களை சுரண்ட அரசாங்கம் துணை போகின்றது.

7. டித்வா புயல் அனர்த்த துக்கு பிறகு மீட்பு, மீள் கட்டமைப்பு விடயங்களில் மலையகத்தை முற்றாகப் புறக்கணித்துள்ளமை.

8. கொத்மலை யில் மக்கள் வீடிழந்து வீதியில் நிற்கும்போது ‘கடதோர’ விகாரையை புனரமைக்க ஜனாதிபிதி வந்து கல் தாண்டிச் சென்ற போதும் மலையக மக்களின் நிலைமையைக் கண்டு கொள்ளவில்லை

9. ஹட்டன் நகரை அபிவிருதிதி செய்வதற்கு 50 மில்லியன் ஒதுக்ககியதாக 2026 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி கைதட்டல் வாங்கிக் கொண்ட போதும் கண்டு கொள்ளாமல் விட்டு இப்போது நிதி மீளவும் திறைசேரி க்கு செல்லவுள்ளது.

10. ஹட்டன் பிரகடனம் குறித்து அவர்களது தேர்தல் அறிக்கையிலும் மீள் வலியுறுத்திக் கூறிய போதும் அதனை நடைமுறைப்படுத்த எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை.

இது போல இன்னும் பல காரணங்களால் ஜனாதிபதி

அனுரவின் தேசிய முன்னெடுப்புகளில் முற்போக்கு அம்சங்களை அவதானித்தபோதும், ஒடுக்கப்படும் தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் இவரை எதிர்த்தாக வேண்டும் எனும் நிலைப்பாட்டைத் தூண்டுவதாக உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026

    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

    November 9, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.