அவுஸ்ரேலியா- விக்டோரியா- எல்லை வீதி, அருள்மிகு ஸ்ரீ சிவாவிஷ்ணு திருக்கோயில்

அகிலத்தை ஆட்டுவிக்கும் ஐயன் சிவனாரும், காத்து அருளுகின்ற
தேவன் திருமாலும் இருந்தருளும் திருக்கோயில்
சைவ மென்றும் வைஷ்ணவமென்றும் பேதமற்ற பெருங்கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்

அவுஸ்ரேலியா பெருந்தீவில் அமைந்திட்ட பெருங்கோயில்
அமைதி யெங்கும் நிலவிடவே அருளுகின்ற இறைகோயில்
கேட்டவரம் தந்துலகை ஆட்கொள்ளும் அருள் கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்

பெருங்கடல் சூழவுள்ள தென்னாட்டிலுள்ள கோயில்
திக்கெங்கும் திருவருள் பொழியும் இறைவர் உறை கோயில்
கேட்டவரம் தந்துலகை வாழவைக்கும் திருக்கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்

தென்கோடி கண்டமதில் நிலை பெற்ற பெருங்கோயில்
அனைத்துலக மக்களுக்கும் அமைதி தரும் இறை கோயில்
உலகிற்கு அமைதிதர எழுந்திட்ட இறைவர் உறை கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்
உமையம்மை உடன் கொண்ட சிவனுறையும் திருக்கோயில்
காக்கும் கடமை கொண்ட திருமாலும் இருந்தருளும் பெருங்கோயில்
அதர்மத்தை அழித்தொழிக்கும் அண்ணல் உறை கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்
மகாலட்சுமி அம்மையையும் அருகு கொண்ட திருமாலுறை கோயில்
மாற்றமில்லா நன்மைகளை வழங்குகின்ற நம் கோயில்
உலகத் தமிழர் உரிமைக்கு உறுதி தரும் பெருங்கோயில்
அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள எங்கள் சிவாவிஷ்ணு திருக்கோயில்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.