பிரான்சில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையை வீரர்களில் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
