யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
