நானுஓயா நிருபர்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மீண்டும் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது , ஏப்ரல் மாதம் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன .
இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 05 சத்திரசிகிச்சைக்குள்ளான மொத்தமாக 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன இவர்களின் ஒருசிலருக்கு பார்வை மிகவும் பலவீனம் அடைந்துள்ளமை காரணமாக வைத்தியசாலையில் கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
எனினும் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதுக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த சத்திரசிகிச்சையின் பின் பாவிக்கப்பட்ட
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியமையால் கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட கிருமி தொற்றுகாரணமாக ஏற்பட்ட சிக்கல் தான் பிரதான காரணம் எனவும் மீண்டும் 17 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து தொகுதியினை முற்றாக அகற்றி , அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்களிலுள்ள கிருமி தொற்றுகளை அகற்றி மீண்டும் கண் புரை அறுவை சிகிச்சையை ஆரம்பித்துள்ளோம் என நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹேந்திர செனவிரட்ன தெரிவித்தார் .
