மோசமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது, 60 கி.மீ வேகத்தில்செல்லுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்து, தங்கள் வாகனத்தை செலுத்துமாறு சாரதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் முன் மற்றும் பின்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
