அதிக காற்று காரணமாக இராகலை புறுக்சைட்டில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07/12/22) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற ஒருவர் உயிர் தப்பிய அதேவேளை பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
அதேவேளை கல்கடபத்தனவில் வீட்டில் மரம் விழுந்து ஒருவர் உயிரழந்துள்ளார். இவ்விரண்டு சம்பவங்களும் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையகம்.lk செய்திகளுக்காக ராகலையிலிருந்து சசி.