Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கோரி வெளிநாட்டவர்கள் கொழும்பில் போராட்டம்
இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கோரி வெளிநாட்டவர்கள் கொழும்பில் போராட்டம்

ThanaBy ThanaMay 26, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“நியாயத்தை வழங்கு” என கோஷத்தை எழுப்பியவாறு நடத்திய போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஒன்றுகூடிய, இலங்கையில் உள்ள பல பாகிஸ்தானிய குடும்பங்கள், நிரந்தர பதிவினை விரைவுபடுத்துமாறும், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தின.

அவர்களின் கைகளில் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் எழுதப்பட்ட, “அகதிகளை மரணத்திற்கு திருப்பி அனுப்பாதீர்கள், அகதிகளும் மனிதர்களே” என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வழங்கப்படும் நிவாரணத்தை குறைத்து கொழும்பில் உள்ள ஐ.நா அகதிகள் அலுவலகம் மூடப்படும் என தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அச்சமடைந்துள்ளனர்.

“பாகிஸ்தான், மியன்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன், நைஜீரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 800 பேர் அகதிகளாக இலங்கையில் தங்கியுள்ளனர். அவர்கள் சட்ட ரீதியாகவே இலங்கையில் உள்ளனர். அந்த நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான  உயர்ஸ்தானிகராலயமே பொறுப்பு” என சமூக மற்றும் அமைதி மையத்தின் மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கூறுகிறார்.

இரண்டு முதல் 10 வருடங்கள் வரை, வெளிநாட்டு அகதிகளாக அவர்கள் நீர்கொழும்பு, பாணந்துறை, தெஹிவளை மற்றும் கல்சிசை ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் மியன்மரில் பௌத்த இராணுவ ஆட்சியில இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள், மேலும் சிலர் பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

அரசியல், மத மோதல்கள் மற்றும் போர்களின் விளைவாக, அவர்கள் பிறந்த நாடுகளிலிருந்து தப்பிய மக்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் உறுப்பு நாடுகளில் குடியேற்றப்பட்டு, பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாட்டில் நிரந்தர குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை கவலை எழுந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் குறைப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் இவர்கள் மத்தியில் உள்ளது.” என மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையில் வாழும் வெளிநாட்டு அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் மருந்தாளர்களாக காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு இலங்கையில் வேலை செய்யும் உரிமை இல்லை.

பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுவர்கள் கல்வியை இழந்துள்ளதால், அவர்களை விரைவில் நிரந்தர குடியிருப்பாளர்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென  வேண்டும் என போராட்க்காரர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புப் போரினால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து பல வருடங்களாக இந்தியா, நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.