டி.சந்ரு செ,திவாகரன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க தாய்வான் நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியினை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (26.05) நானுஓயாவில் இடம்பெற்றது.
நானுஓயா நாவலர் ஆரம்ப பாடசாலை அதிபர் சதாசிவம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 30 கிலோ வீதம் அரிசிப் பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் அவர்களின் கலந்து கொண்டார் , தெரிவு செய்யப்பட்ட 312 அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
