லிந்துலை – ஹென்போல்ட் தோட்ட அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் பறவைகாவடியும் தீமிதிப்பு நிகழ்வும் இன்றைய தினம் (03) இடம்பெற்றது.

கடந்த வியாழக்கிழமை (01) கரகம் பாலித்தல் நிகழ்வோடு ஆரம்பமான தேர்திருவிழாவில் நேற்றை தினம் வெள்ளிக்கிழமை (02) மருதை வீரன் குதிரை வாகனத்தில் அம்மன் ஊர்வலம் இடம்பெற்றது. மேலும் இன்றைய தினத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
– ராசையா கவிஷான் –

