அநுராதபுரம், இராஜாங்கனை பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியானதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற – சிறுமியின் தந்தை (வயது 35), தாய் (வயது 32) ஆகியோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியான 28 வயது இளைஞரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.