Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடு மீது மண்மேடு சரிந்து காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!

August 3, 2026

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

August 3, 2026

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனைத்து பல்கலை மாணவர்கள் ஒன்றியத்தினர் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்.
இலங்கை

அனைத்து பல்கலை மாணவர்கள் ஒன்றியத்தினர் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்.

ThanaBy ThanaJune 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினர் இன்று (7) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு வீதி காவல் நிலையங்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், அந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தனது உத்தரவில் பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026
    Editors Picks

    ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடு மீது மண்மேடு சரிந்து காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!

    August 3, 2026

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026

    ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடு மீது மண்மேடு சரிந்து காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!

    August 3, 2026

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.