கடந்த வியாழக்கிழமை (08/12/22) வீசிய கடும் காற்றின் காரணமாக இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை பிரதேசத்திலுள்ள எமது LRG பிரிவில் மாத்திரம் சுமார் 80 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளது.

குறித்த அணர்த்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பாதுகாப்பான வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் குறித்த பிரதேசங்களில் மின் துண்டிப்பு நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
