கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக பயணிகள் வெளியேறும் முனையத்தில், இரண்டு தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கருமப்பீடங்கள் அமைக்கப்படவுள்ளன.
எட்டு மாதங்களின் பின்னர், பயணிகள் வருகை முனையத்தில் இரண்டு கருமப்பீடங்கள் நிறுவப்படவுள்ளன. இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வழங்கவுள்ளதுடன், இதற்கான நிதியை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் வழங்கவுள்ளது.
உலகலாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில், தானியங்கி குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு கட்டமைப்பு தொழிற்படுவதுடன், அதற்காக சிங்கப்பூர் நிறுவமொன்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.