Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டு கொள்வதற்கு சீன ஆராய்ச்சி
இலங்கை

மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டு கொள்வதற்கு சீன ஆராய்ச்சி

ThanaBy ThanaJune 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், தீர்வுகளை பெறுவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் நாட்டில் நீர் மற்றும் சுகாதாரத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தேசிய முயற்சியை  வலுப்படுத்துவதகு அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன்,  சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலான்று இடம்பெற்றுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல்  (11.06.2023) நீர் வழங்கல் சபையின் புதிய கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதிகளாக சீன ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அகாடமி பேராசிரியர் Min Yang, பேராசிரியர் Wei Yuansong , பேராசிரியர் Yawei Wang உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக உலகின் அதியுயர் தொழில்நுட்பத்தை வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடங்கள், புதிய ஆராய்ச்சி சாதனங்கள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற சீனாவின் நடவடிக்கைக்கு அரசின் சார்பில்  அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றிகளை தெரிவித்தார்.

சீன – இலங்கை கூட்டு நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் நீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை மக்களின் சார்பில் சீனாவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.