இரத்தினபுரி மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டம் உட்பட கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட உட்பட நான்கு மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி,எஹலியகொட,குருவிட்ட,கிரிஎல்ல,எலபாத்த,கலவான,
பெல்மடுள்ள,அயகம ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
