Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

July 28, 2026

நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையின் உணவு பாதுகாப்பின்மை தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு
Breaking

இலங்கையின் உணவு பாதுகாப்பின்மை தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு

ThanaBy ThanaJune 14, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உலக உணவு வேலைத்திட்ட உதவிச் செயலகத்தின் (PSWFPC) பணிப்பாளர் நாயகமுமான கலாநிதி சுலக்‌ஷன ஜயவர்தன 2023 மே 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலான (CFSAM) அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை மக்கள் பார்வைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பின் (FAO) உத்தியோகபூர் இணைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி இணையத் தளத்தில் உண்மைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் இயலுமை காணப்படுகின்ற போதும் சில உள்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் காணப்படும் தகவல்களுக்கு புறம்பான விடயங்கள் காணப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 17% சதவீதமானவர்கள் அதாவது 39 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் கடந்த வருடத்தின் ஜூன்/ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது அந்த நிலைமை 40% சதவீத குறைவடைந்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பின்மை முகம்கொடுத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 66,000 இல் இருந்து 10,000 வரையில் குறைவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேற்படி விடயத்தை உணவு நுகர்வின் அதிகரிப்பாகவும் கருத முடியும் என்பதோடு, அறுவடைக் காலத்தில் விவசாய சமூகத்தினரின் குறைந்த உணவுச் செலவும் அதிக வருமானமும் இதற்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உணவுப் பாதுகாப்பின்மையின் அளவு மற்றும் தீவிரம் பற்றிய துல்லியமான, விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான தகவல்களை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குவதே உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு ஆய்வின் (CFSAM) நோக்கமாகும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டுச் செயற்பாட்டின் ஊடாக , முழுப் பொருளாதாரச் சூழலையும் கருத்திற் கொண்டு, பெரும் மற்றும் நுண் மட்டம் இரண்டிலும் உணவுப் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்கிறது.விவசாயப் பொருட்கள், சந்தை நிலைமைகள், கேள்வி-விநியோக மற்றும் நிலைமைகள் உள்ளடங்களாக தேசிய தானியங்கள்/ பிரதான உணவு உற்பத்தி இருப்புப் பத்திரம் (NFBS)அடுத்த வருடத்தில் பிரதான உணவு பொருட்களின் இறக்குமதிக்கு அவசியமானதும் பூர்த்தி செய்யப்படாததுமான மதிப்பீடும் செயற்பாடுகளும் உள்வாங்கப்படும் எனவும் கலாநிதி சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026
    Editors Picks

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.