Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அட்டன் – அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்
கோவில்

அட்டன் – அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்

ThanaBy ThanaJune 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் நகரம் அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்

எட்டுத் திக்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி
மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே
ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச்செய்வாய் நன்மைகளை
அட்டன் மாநகரமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே

மலை சூழ்ந்த மாநிலத்தில் குன்றினிலே கோயில் கொண்டாய்
அலைமோதும் மனங்களிலே ஆறுதலைத் தருவோனே
நிலைகுலையா நிம்மதிக்கு உன்துணையே வேண்டுமைய்யா
தலை தாழ்த்தி வணங்குகிறோம் மாணிக்கப் பிள்ளையாரே

எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையாயிருந் தெமக்கு நல்லவழி காட்டிடைய்யா
இழிநிலையைப் போக்கிவிடு இன்ப நிலை தந்துவிடு
விழி மலர்ந்து நிற்பவனே மாணிக்கப் பிள்ளையாரே

சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளிநீயே
கிலி கொண்டு துவண்டு நிற்போர் துயர் போக்கி அருள்வோனே
வலிந்து வரும் துன்பங்களை அகற்றி வழி காட்டிடுவாய்
நலிவில்லா நலமளிக்கும் மாணிக்கப் பிள்ளையாரே

நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும்
உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும்
மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உந்தனையே
அன்பைப் பெருக்கியெம்மை ஆட்கொள்ளும் மாணிக்கப் பிள்ளையாரே

வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற திருமகனே
நாதியில்லை என்ற நிலை எமக்கென்றும் இல்லையைய்யா
ஆதிசிவன் பெற்ற மகன் அருகினிலே நீயிருக்க
கதி நீயே கருணை செய்து ஆட்கொள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்

    April 8, 2026

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை பக்தி பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்!

    April 5, 2026

    ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி

    November 13, 2025

    அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா

    October 9, 2025
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.