Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்
இலங்கை

கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்

ThanaBy ThanaJune 15, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது அண்ணன், அக்கா மற்றும் அக்காவின் கணவர் அவரது மகள் ஆகிய 4 பேரை இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மட்டு. கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 1/2 லட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் கொடுத்த கடணை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதாக அறிந்த அவர் சம்பவ தினமான நேற்று (13) மாலை 6 மணியளில் சகோதரியின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட வாய் தர்க்கம் அதிகம் ஆனாதால் அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள், இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.