மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.15.06.2023.
மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கணக்குகள் கடந்த 2016 வருடம் முதல் இன்று வரை கூட்டுறவு திணைக்களம் மூலம் பரிசீலனை மேற் கொள்ளவில்லை என நுவரெலியா கூட்டுறவு சங்கத்தின் ஆணையாளர் தெரிவித்தார்.
தகவல் அறியும் சட்டம் மூலத்திற்கினங்க மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடாத்தப்படும் கிராமிய வங்கி கிளையின் கணக்கு சம்பந்தப்பட்ட விபரம் கேட்ட போது ,
மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான ஆணையாளர் திருமதி.பிரேமசிங்க அவர்கள் எழுத்து மூலம் மேற்கண்டவாறு அறியத்தந்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின்; கணக்குகள் அனைத்தையும் வருடாந்தம் கணக்கு ஆய்வாளர்கள் மூலம் கணக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இருந்த போதும் மஸ்கெலியா பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடாத்தப்படும் கிராமிய வங்கி கிளையின் கணக்கு கடந்த 7 ஆண்டுகளாக கணக்கு ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்யவில்லை என இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்த்தியை தெரிவிக்கின்றனர்.