Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தற்போதைய தொழில் சட்டத்தில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார
இலங்கை

தற்போதைய தொழில் சட்டத்தில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ThanaBy ThanaJune 15, 2023Updated:June 16, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்போதைய தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் பெருந்தோட்டப் பகுதியில் மூன்று தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாப்பை உறுதி செய்யும் நடை முறையில்லை. இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட தொழில் சட்டங்களே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொழிலுக்காக காத்திருப்போரின் நலன் கருதி காப்புறுதி திட்டத்திற்காக தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் ,இதேபோன்றே கல்வி கற்ற பெண்களில் பெரும்பாலானோர் குழந்தை பெற்ற பின்னர் தொழிலை கைவிட்டு குழந்தை தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தும் நிலை தற்போது காணப்படுகிறது. ஆனால் அவர்கள் கற்ற கல்வியினால் நாட்டுக்கோ அல்லது அவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனை கருத்திற்கொண்டு பெண்கள் வீடுகளில் இருந்தவாறே தொழில் செய்யக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்த்தை முன்னெடுக்கவும் ,தொழில் புரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரசவகால விடுமுறையைப் போன்று ஆண்களுக்கும் இந்த விடுமுறையை வழங்குவதற்கான சட்ட திருத்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலாக கல்வி கற்கும் போதே பகுதிநேர தொழிலில் ஈடுபடுவதற்கான வசதிகள் சட்ட ரீதியில் மாணவர்களுக்கு இல்லை இதற்கு வசதி செய்யும் வகையில தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்பார்க்க பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் ,தொழில் துறைகளை சார்ந்தவர்கள் ,பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறியும் ஏழாவது பொது கலந்தாய்வு அமர்வு நேற்று (14) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அமைச்ர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நவீன உலக தொழில் துறைக்கு அமைவாக தொழிலாளர்களின் நலன்களை பாதுக்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ள தொழில் சட்ட திருத்தத்திற்கான வரைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாராங்களில் தயாரிக்கப்பட்டுவிடும். இதற்காக தயாரிக்கப்படும் செப்பமற்ற வரைவு (Rough draft) வுடன் அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடி சட்டமூலத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் சட்டத்தில் திருங்களை மேற்கொள்வது தொடர்பில் தொழில் அமைச்சு மேற்கொண்ட இந்த பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் மற்றும் அலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் அல்லது சர்வதேச நிறுவனங்கள் தற்போதைய தொழில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமகால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த தற்போதைய தொழில் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் ,புதிதாக தொழில் துறைகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் பாகுபாடு இடம்பெறக்கூடாது. தொழிலாளர்கள் ,ஊழியர்களுக்காக தற்போது பல்வேறு சம்பள சபைகள் உண்டு. இவை அனைத்தையும் உள்ளடக்கியவகையில் தேசிய சம்பள நிர்ணய சபையை அமைத்தல் ,தொழில் துறைகளில் பாலியல் வன்முறையை தடுத்தல், 5 நாள் வேலைக்கான நெகிழ்வு முறையிலான நடைமுறைக்கு வழி செய்தல் ,ஊழியர் தொடர்பிலான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு நீண்ட காலம் செல்வதை தடுத்தல் ,கொவிட் 19 வைரசு தொற்று ஏற்பட்ட காலத்தின் போது எதிர்நோக்கப்பட்ட தொழில் பிரச்சினை மற்றும் தொழில் துறைகளுக்கான மூலவள பற்றாகுறை ,எதிர்காலத்திலும் ஏற்பட்டால் மேற்கொள்ளப்படவேண்டிய தொழில் சட்டமுறை உள்ளிட்ட சுமார் 20 விடயங்களிலும் சட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்தையும் பலரும் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.