வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அருள்மிகு உடுக்கிவளை மகாகணபதிப் பிள்ளையார் திருக்கோயில்
வட்டு மாநிலத்திலே கோயில் கொண்ட கணபதியே
வாட்டவரும் துன்பங்களைப் போக்கியெமக் கருள்வோனே
நாற்றிசையும் நன்மைகளைப் பரப்பிவிடும் தலைமகனே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா
எங்கும் நலன் பெருகிவிட அருளளிக்கும் கணபதியே
ஏங்கி நிற்கும் மக்களின் ஏக்கம் போக்கிக் காப்போனே
என்றும் உடனிருந்து அருள் பரப்பும் பெருமானே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா
எழில் சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் கணபதியே
எதிர்காலம் வளமுறவே வாழ்த்தி எமக்கருள்வோனே
ஏற்றமிகு சிந்தனையை எங்குமே பரவவிடும் சிவன் மகனே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா
அமைதி கொண்ட திருவுருவம் தாங்கி நிற்கும் கணபதியே
அச்சமில்லா மனநிலையை தந்தெமக்கு அருள்வோனே
அல்லல் அகற்றி அரவணைக்கும் பேரருளே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா
வடஇலங்கை காட்சி தந்து வளமளிக்கும் கணபதியே
வரும் நோய்கள் போக்கியெமக்கருள்வோனே
வற்றாத துணிவினையே தந்து
காப்பளிக்கும் உமைமகனே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா
ஓம் என்ற பிரணவத்துள் உறைகின்ற கணபதியே
கலக்கநிலை போக்கி யெமக்கருள்வோனே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் மாமணியே
உடுக்கிவளைப் பிள்ளையாரே எமக்கருள வந்திடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.