மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் செயலாளர் செல்வி லதா அவர்கள் கடந்த 10ம் திகதி
ஐக்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு இலங்கை
குழுவின் அங்கத்தவராக சட்டரீதியாக பதிவியேற்றுள்ளார்.

இக்குழுவில் அங்கம் வகிக்க நான்கு ஆண்டுகளாக அயராத உழைப்பின் காரணமே இவ்வெற்றி கிட்டியுள்ளது என்பதில் பெருமைப்படுகின்றோம்.

பெண்களாலும் சாதிக்க முடியுமென சாதனை புரியும் வீரபெண் என பெருமிதம் கொள்வோம்.
பல சாவால்களை எதிர்த்து சரித்திரம் படைத்த பெண் என மகிழ்ந்திடுவோம்
எதிரிகளையும் எதிர்நீச்சல் இட்ட பாரதியார் கண்ட புதுமை பெண்ணல்லவா
வாய் வார்த்தைகளில் மட்டுமல்லதா வீரச்செயல்களாய் சேவை செய்கிறார்
பெண்களை அவதூறு பேசுபவர்களுக்கு படிப்பிணையாண பெண்ணல்லவா
ஆதிக்கம் என்பது பெண்மை கிடையாது சாதிக்க பிறந்த பெண்கள் என நிருப்பித்தவர் அல்லவா.

மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பில் இனைந்தும் நான்கு வருடங்களில் சிறப்பான சேவையாற்றியுள்ளார்.

இவ்வாறான பல சேவைகளை சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்யும் இவரை மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் அணைத்து நல்லுள்ளங்கள் சார்பாகவும் வாழ்க வளர்க உங்கள் சேவைபணி என மனதார வாழ்த்துக்கின்றனர்.
