கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்ஸவல்ல அளுத்வெல பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக உடவெல விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உஸ்ஸவல்ல அளுத்வெல பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் 15 பர்ச்சர்ஸ் காணியை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது 5 அடி 1 அங்குல உயரமான 2170 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6 கிலோ கிராம் 150 கிராம் உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் முரகெடிய 100 ஏக்கர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் வெஹயாய , அதலிவெவ பகுதியை சேர்ந்த இருவருமாக மூவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு கொஸ்லந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா