வி.தீபன்ராஜ்
நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம், 21 ஆதரவு வாக்குகளால் இன்று உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இந்த அமர்வு நடைபெற்றது.
தவிசாளர் உட்பட 21 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், இரு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
எந்தவொரு எதிர்ப்பும் இன்றி 21 ஆதரவு வாக்குகளைப் பெற்று, நுவரெலியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் வி.தீபன்ராஜ் தெரிவிக்கின்றார்.
