மிக நீண்ட காலமாக ஹொரனை நகரிலுள்ள தனியார் வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட படையினரால் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 100 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட படையணியின் ஹொரனை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் ஹொரனை- தெலகஹ சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுளனர்.
50 வயதான இப்பெண் 250 ,300 மற்றும் 500 ரூபாய்களுக்கு மாணவர்களுக்கு போதை மாத்திரையை விற்பனை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
